சுகாதார உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் சுகாதார உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டம், தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்