அரக்கோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரக்கோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்;

Update: 2025-07-22 04:16 GMT
அரக்கோணம் ரோட்டரி சங்கம், ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சென்னை அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிசிச்சை முகாம் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் மனோகர் பிரபு தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபதி முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க மருத்துவ சேவை இயக்குநர் எஸ்.டி.ராஜேஷ், ஆலோசகர் ஜி.மணி ஆகியோர் வரவேற் றனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ் டைல்ஸ் பி.இளங்கோ முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் கண் நோயால் பாதிகப்பட்டவர்கள் சிகிச்சைக்காக சென்னை அகர்வால் கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.பி.கே.பிரபாகரன், நரேந்திரகுமார், குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News