காவேரிப்பாக்கம் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

காவேரிப்பாக்கம் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு;

Update: 2025-07-22 04:19 GMT
காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கன்னிகாபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாப்பிரகாசி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தார். காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரேஷன் கடையை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News