உடையாளிபட்டி அருகே அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து
விபத்து செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாவூரிலிருந்து கீரனூருக்கு தங்கவேல் (70) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, குகூர் கிளை சாலையில் அரசு பேருந்தை ஓட்டி வந்த பெரியசாமி (50) மோதியதில் தங்கவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.