கட்டிப்பாளையம்-தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்-விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

கட்டிப்பாளையம்-தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்- விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-07-22 14:38 GMT
கட்டிப்பாளையம்-தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்- விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் வயது 36. இவரைப் பகுதியில் ஹோட்டல் மற்றும் ஆம்புலன்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஜூலை 21ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார், இதனை அறிந்த அவரது மனைவி சரண்யா வயது 34 தனது கணவனை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு யுவராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சரண்யா அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த யுவராஜின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர்.

Similar News