கிட்னி மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தே.மு.தி.க. பொதுச் செயலர் பிரேமலதா அறிக்கை

ஏழைத் தொழிலாளிகளை மூளைச் சலவை செய்து கிட்னியை பறித்து கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய  தண்டனை வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலர் பிரேமலதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளா;

Update: 2025-07-22 16:45 GMT
ஏழைத் தொழிலாளிகளை மூளைச் சலவை செய்து கிட்னியை பறித்து கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய  தண்டனை வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலர் பிரேமலதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  தே.மு.தி.க. பொதுச் செயலர் பிரேமலதா அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் விசைத்தறி தொழில் மிகுந்த பகுதியாகும். ஏழைத் தொழிலாளர்களை குறி வைத்து மூளைச் சலவை செய்து, கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடந்துள்ளது. இது பெரும் கண்டனத்திற்குரியது. மேலும் வறுமையின் காரணமாக என் கிட்னியை விற்றேன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி எடுக்கப்பட்டது, என பாதிக்கப்பட்ட ஒரு நபர்  தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் செய்யும் புரோக்கர்கள் போல் , கிட்னி புரோக்கர்களாக மாறி உள்ளனர். கிட்னியை விற்று, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கண்டறிந்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும். இதில் ஒரு சில போலீசாரும் ஈடுபட்டுள்ளார்கள் என பொதுமக்கள் கூறியுள்ளனர். ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை விற்று வியாபாரம் செய்யும் கயவர்களை கண்டறிந்து, உரிய தண்டனை வழங்கி, இந்த அரசு ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News