காங்கேயம் அருகே திருப்பூர் மாநகராட்சி லாரிகளில் கழிவுகள் ஏற்றி வந்து கொட்டும் போது தடுத்து நிறுத்திய பொதுமக்கள். லாரி மற்றும் ஜீப்பில் வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - பரபரப்பு 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராசிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான 3 லாரிகளில் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொண்ட வந்த வாகனங்களை சிறை பிடித்த பொதுமக்கள் வாக்குவாதம்.;

Update: 2025-07-23 00:14 GMT
காங்கேயம் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராசிபாளையம் பகுதியானது நிலத்தடி நீர் பொய்த்து போய் உள்ளதால்  விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதானல் கால்நடைகள் வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டு இப்பகுதி விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு அரசு புறம்போக்கு மற்றும் தனியார் இடங்களில் பத்துக்கு மேற்பட்ட பாறைகுழிகள் உள்ளது. இதில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறை குழிகளில் சில இடத்தில் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஒரு சில இடத்தில் கம்பி வேலி அமைக்காமல் பாதுகாக்கப்படாமல் இருந்து வருகின்றது. அப்படி இருக்கும் இடத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான 3 லாரிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் கழிவுகள், மனித கழிவுகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு ராசி பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு பாறைக்குழியில் கொட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் வழித்தடங்கள் ஏற்படுத்திக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சில பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை பார்த்து மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்துள்ளனர் அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அனுமதியோடுதான் இந்த பாறைக்குள்ளியில் கொட்ட வந்துள்ளதாக முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இது குறித்து ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மாநகராட்சி ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள், ஜிபில் வந்த அதிகாரிகள் ஆகியோரிடம் இங்கு கொட்டுவதற்கான அனுமதி கடிதம் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினிடம் வாக்குவாதம் ஏற்படவே 3 லாரிகள், ஜேசிபி இயந்திரம், ஜீப் ஆகியவற்றை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கழிவுகள் கொட்டும் பாறைக்குழி அருகே கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஓரிரு மாதங்களில் திருப்பணிகள் வேலைமுடிந்த பின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில்  மேலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த பாறை குழியில் கழிவுகள் கொட்டினால் துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீர் மாசடைந்து விடும் என்கின்றனர்.

Similar News