ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது;
ஆற்காடு காய்கார தெருவை சேர்ந்த சேகர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து சேகர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம் எதிரே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்காடு அன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித் (வயது 21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சேகருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து அஜித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.