திருவாரூரில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தமிழ்நாடு சத்துணவு மாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-23 07:25 GMT
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாக கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதி படி சிறப்பூதியம் 6,750 வழங்க வேண்டும், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி சிறப்பு ஓய்வூதியம் 1,500 ரூபாய் திருத்தி அமைக்க வேண்டும், ஈமக் கிரியை தொகை ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு, மருத்துவ படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து தரையில் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News