அகரதிருநல்லூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
திருவாரூர் அருகே காணாமல் போன முதியவர் உடல் அழுகிய நிலையில் சடலம் மீட்பு தாலுகா போலீசார் விசாரணை.;
திருவாரூர் அருகே அகரதிருநல்லூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்துள்ளது இதனை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் உடனடியாக விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி 70 என்பது தெரியவந்தது. கடந்த மாதம் 20ஆம் தேதி ஆடுமேய்க்க காணாமல் போன நிலையில் 26 ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உடல் அழுகிய நிலையில் ரங்கசாமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.