நெடுவாக்கோட்டையில் உங்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா
மகளிர் உரிமை தொகை பெறுவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அதிகாரிகளிடம் வழங்கினர்இதில் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, விதை நெல்,வேளாண் இடுபொருள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தார் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா கிராமங்கள் தோறும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுவதாகவும் குறிப்பாக மகளிர் உரிமை தொகை பெறுவதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் இதனை பெண்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டுமென தெரிவித்தார்.