பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
திருவாரூரில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை;
கொட்டாரக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்(45) ஒருவர் அதே பகுதியில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்து வருகிறார். அந்த விவசாய பண்ணையை திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது சுல்தான்(44) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் முகமது சுல்தான் கொட்டாரக்குடி அப்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்து அவர் மயங்கியவுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது சுல்தானை திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.