கரூர் -மணல் கொள்ளையை எதிர்த்து விரைவில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம்.செந்தில்நாதன் பேட்டி.

கரூர் -மணல் கொள்ளையை எதிர்த்து விரைவில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம்.செந்தில்நாதன் பேட்டி.;

Update: 2025-07-23 08:02 GMT
கரூர் -மணல் கொள்ளையை எதிர்த்து விரைவில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம்.செந்தில்நாதன் பேட்டி. கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கஞ்சா போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இதைத்தான் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் உச்சகட்டமாக குளித்தலையில் செய்தியாளரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு பூஜ்ஜியமாக உள்ளது. வாங்கலில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.எனவே மணல் கடத்தலை கண்டித்து விரைவில் மாநில தலைவர் தலைமையில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Similar News