மறவாபாளையம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டம்-நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.
மறவாபாளையம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டம்-நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.;
மறவாபாளையம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டம்-நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவா பாளையம் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொது குறைபாடுகள் குறித்து மனு அளித்தனர். முகாமில் பணியாற்றிய அதிகாரிகள் உடனுக்குடன் மனுவை சரிபார்த்து தகுதியான நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.