கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக ஆன்லைனில் புகார்கள் எஸ் பி நேரடி விசாரணை.

கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக ஆன்லைனில் புகார்கள் எஸ் பி நேரடி விசாரணை.;

Update: 2025-07-23 13:17 GMT
கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக ஆன்லைனில் புகார்கள் எஸ் பி நேரடி விசாரணை. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா பொதுமக்களிடமிருந்து பெரும் புகார்கள் எந்த காவல் நிலையத்திற்கு சேர்ந்ததே , அந்த காவல் நிலைய அதிகாரியுடன் ஆன்லைனில் உடனுக்குடன் புகார் குறித்து புகார்தாரர் முன்நிலையில் நேர்காணல் செய்து புகார் குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பணியாற்ற கூடிய அதிகாரிகள் புகாரின் மனுவில் உள்ள பிரச்சனை தொடர்பான எஸ்பி-யின் கேள்விக்கு பதில் அளித்தனர். கரூர் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்வு இதுவரை நடைபெறாத நிலையில் , புதிய SP-யின் இந்த புதிய நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

Similar News