ராசிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு...
ராசிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் புஸ்ஸிஆனந்த் பேசுகையில், ஊழல் கறை பிடித்த பாசிச பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு தமிழகத்தை வஞ்சிக்கும் திமுகவை தளபதி விஜய் அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார், ஓரணியில் தமிழகம் என்ற சூழ்ச்சி வாசகத்துடன் பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவுக்கு திமுக கட்சியானது தங்களுக்காக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பண்ணையார்களாக வலம் வந்தவர்கள் இன்று பணியாளர்களாக வீதி, வீதியாக தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்காக வலம் வருகின்றனர், மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் உங்களை திமுக உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள் நீங்கள் ஏமாந்து விட வேண்டாம், அந்த பணம் உங்கள் பணம் தான், பிளவுவாத கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது. திமுகவின் பேச்சு 2026-ல் போச்சு என்ற நிலையை மாற்ற வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ,என பலர் கலந்து கொண்டனர்..