மேலூர் அருகே அகில இந்திய பெண்களுக்கான கபடி போட்டி
மதுரை மேலூர் அருகே அகில இந்திய பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.;
மதுரை மேலூர் அருகே உறங்கான்பட்டியில் அகில இந்திய பெண்களுக்கான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அளவில் 21 பிரபல மகளிர் கபடி அணிகள் கலந்து கொண்டது. மும்பை சென்ட்ரல் ரயில்வே அணி, கல்கத்தா தென்கிழக்கு ரயில்வே அணி, நாக்பூர் போலீஸ் அணி, சண்டிகர் அணி, மங்களூர் ஆலவாஸ் அணி, எஸ்.எ.ஐ. குஜராத் அணி, டெல்லியை சேர்ந்த அணிகள், வடக்கு ரயில்வே அணி, சி.ஐ.எஸ்.எப். அணி, ஐ.டி.பி.பி. அணி, எ.எம்.பி.ஒய். அணி, பாலம் ஸ்போர்ட்ஸ் அணிகள் உட்பட ஹரியானா, கல்கத்தா, சன்டிகார், மும்பை , மங்களூர், நாக்பூர், சோனிபட், குஜராத், சென்னை, ஒட்டன்சத்திரம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 21 மகளிர் கபடி அணிகள் இந்த 3 நாள் போட்டியில் கலந்து கொண்டன. நேற்று (ஜூலை .23) புதன்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு பரிசு 17 லட்சம் ரூபாய், முதல் பரிசு ரூ. 2,00,001 உட்பட ரூ.23 லட்சத்துக்கும் மேல் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது. தேசிய அளவிலான இந்த மகளிர் கபடி போட்டிக்காக இரவை பகலாக்கும் மின்னொளியில் உலக தரம் வாய்ந்த மிக நவீன விளையாட்டு திடல் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர்.