தீ விபத்து.ஒருவர் பலி.
மதுரை அருகே நிலையூரில் கேஸ் ஸ்டவ் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.;
மதுரை அருகே நிலையூர் கைத்தறி நகரில் குடியிருக்கும் கிருஷ்ணனின் மகன் பிரகாஷ்( 55) என்பவர் கடந்த 10ம் தேதி காலை வீட்டில் கேஸ் ஸ்டவ் பற்ற வைக்கும் போது எதிர்பாராத விதமாக தீ அவரது துணியில் பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் உடலில் பல காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று (ஜூலை .23) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இது குறித்து அவரது மகன் சிவ பிரபு ஆஸ்டின்பட்டி காவல்நிலத்தில் புகார் அளித்தார் . போலீசார் விசாரிக்கின்றனர்.