ராமநாதபுரம் மண்டல பூஜை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

காளியம்மன் கோவில் 48 ஆம் நாள் மண்டல பூஜை இசை வாத்தியங்கள் ஆட்டம் பாட்டம் வானவேடிக்கையுடன் பெண்கள் சிறுமிகள் கும்மி பாட்டு கும்மியாட்டம் நடனமாடி உற்சாகம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2025-07-24 05:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோவில் கருப்பணசுவாமி ஆலய 48 ஆம் நாள் மண்டல கால பூஜை விழாவை முன்னிட்டு வான வேடிக்கை ஆட்டம் பாட்டம் உற்சாகமாக மேளதாளம் இசை வாத்தியங்களுடன் பெண்கள் சிறுமியர் இசை வாத்தியங்களுக்கு ஏற்றவாறு கும்மி பாட்டு கும்மியாட்டம் நடனமாடி உற்சாகமாக மகிழ்ந்தனர் முன்னதாக முளைப்பாரிகளை பெண்கள் வானவேடிக்கை இசை வாத்தியங்களுடன் காடமங்கலம் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் ஆக கிராம காவல் தெய்வங்கள் ஆலயங்களுக்கு சென்று ஆலயத்தை சுற்றி வலம் சென்று மீண்டும் காளியம்மன் ஆலயம் வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து பெண்கள் கும்மியாட்டம் கும்மி பாட்டு பாடி உற்சாகமாக மகிழ்ந்தனர்

Similar News