சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு சிறைத்தண்டனை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை;
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 28). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகு றித்து டவுன் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கடந்த 21.11.2017 அன்று கன்னியப்பனை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி செல்வம் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.அதில் கன்னியப்பனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.