கலவரத்தில் காயம் அடைந்தவர்களை பார்வையிட்ட ஆறுதல்

பெருமாள் கோவில்பட்டி கலவரத்தில் காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் மாவட்ட முன்னாள் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல்;

Update: 2025-07-24 07:29 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் காளியம்மன் கோவில் வேலி கற்களை பிடுங்கி எறிந்த பிரச்சனையில் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துராஜா உள்ளிட்ட அனைவரையும் திண்டுக்கல் பா ஜ க கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தனபாலன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் , அமைச்சராகவும் பதவி வைத்து வரும் ஐ.பெரியசாமி அவர்கள் பெருமாள்கோவில்பட்டியில் இரண்டு மதத்தினரை அமைதிப்படுத்தி நடுநிலையாக செயல்படாமல் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும் மறுதரப்பினருக்கு எதிராகவும் செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் இது போன்று மத மோதல்களை உருவாக்குவதை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி மத மோதல்கள் வராமல் இருக்க 24 மணி நேரமும் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Similar News