ஆட்டோ ஓட்டுனரை, கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ

நிலக்கோட்டை அருகே, செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்த நபர்களை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரை, கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது;

Update: 2025-07-24 11:52 GMT
நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்திலிருந்து நிலக்கோட்டை தனியார் பள்ளிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முனிசெல்வம் (28) என்பவர் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி நிலக்கோட்டை தனியார் பள்ளியில் இறக்கி விட்டு, மீண்டும் மாணவிகளை செங்கோட்டையில் இறக்கி விடுவார் என, கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்து, ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆட்டோ டிரைவர் முனிச்செல்வம் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் முனிசெல்வம் செவ்வாய்க்கிழமை காலையில், ஆட்டோவில் பள்ளி மாணவிகளை அழைத்துக் கொண்டு செல்ல வந்த போது, அந்த இளைஞர்கள் ஆட்டோவை மறித்து, டிரைவரை ஆட்டோவில் இருந்து இழுத்து கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்தினர். பெண்கள் ஓடி சென்று ஆட்டோ டிரைவர் தாக்குவதை விளக்கிவிட்ட போதும், இரண்டு இளைஞர்கள் கடுமையாக ஆட்டோ டிரைவரை தெருக்களுக்குள் இழுத்துச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த மாணவிகள் அச்சத்திலும், உயிர் பயத்திலும் ஆட்டோவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அதேபோல் தெருவில் பள்ளிகளைச் சென்ற சிறுவர்கள் தப்பி ஓடுகின்றனர். ஆட்டோ டிரைவரை இரண்டு இளைஞர்கள்கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News