ஒத்தையூரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
ஒத்தையூரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.;
ஒத்தையூரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் வெள்ளியணை நடு மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கன்னமநாய்க்கர் மனைவி சின்னம்மாள் வயது 75. இவர் ஜூலை 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் பாளையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது ஒத்தையூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கட்ச காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவேல் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டிவந்த டூவீலர் நடந்து சென்ற சின்னம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது சின்னமாலை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மணிவேலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த சின்னம்மாள் மகன் ராஜ்குமார் வயது 26 அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிவேல் மீது வழக்கு பதிவு செய்தனர் வெள்ளியணை காவல்துறையினர்.