மூலிமங்கலம் பிரிவு-நின்றிருந்த பெண் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.

மூலிமங்கலம் பிரிவு-நின்றிருந்த பெண் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.;

Update: 2025-07-24 12:17 GMT
மூலிமங்கலம் பிரிவு-நின்றிருந்த பெண் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர் , பூசாரிபாளையம், மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி வசந்தி வயது 42. இவர் ஜூலை 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மூலிமங்கலம் பிரிவு அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது கர்நாடக மாநிலம் , போலார் , பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் வயது 34 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் , நின்றிருந்த வசந்தி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த வசந்தியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் குறித்து வசந்தியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று , விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News