புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு

தக்கலை;

Update: 2025-07-24 14:36 GMT
இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் தக்கலையில் ஐந்தாவது புத்தக கண்காட்சி கடந்த பத்து நாட்களாக நடந்து வருகின்றது. பத்தாம் நாள் இலக்கிய விழா நடந்தது. விழாவுக்கு எழுத்தாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செல்லப்பதி ஆர். ரசல்தாஸ், வழக்கறிஞர் சிவக்குமார், கவிஞர் செய்து அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக சேவகர் தக்கலை சந்திரன் வரவேற்று பேசினார்,சமூக பண்பாளர் கனீஷ், கல்வியாளர் பேராசிரியர் கமல செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக குருமகாசன்னிதானம் பாலபிரஜாபதிஅடிகளார் கலந்துகொண்டு தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர்ஆர்.தர்ம ரஜினி , கவி சலீம், டாக்டர் முருகேசன், விபின் அலெக்ஸ், வித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை நிறுவனர் சிவனி சதீஷ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து சிறப்பித்தனர்.

Similar News