மாயனூர்-ஆடி அமாவாசை- மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
மாயனூர்-ஆடி அமாவாசை- மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்.;
மாயனூர்-ஆடி அமாவாசை- மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை,தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்த தங்களது முன்னோர் நினைவாக நீர்நிலைகளில் புனித நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். கரூர் மாவட்டம் காவேரி ஆற்றங்கரையை ஒட்டிய தளவா பாளையம், நெரூர், மாயனூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். மாயனூர் காவேரி ஆற்றங்கரையில் புனித நீராடி பின்னர் வாழை இலையில் பழம், வெற்றிலை பாக்கு, எள்ளு, அரிசி ஆகியவற்றை கொண்டு ஏராளமானோர் வரிசையாக அமர்ந்து முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுத்தனர்.