சங்கரன்கோவில் ஆடித்தபசுக்கு ராட்டினம் அமைக்கும் பணி நடைபெறுகிறது
ஆடித்தபசுக்கு ராட்டினம் அமைக்கும் பணி நடைபெறுகிறது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் பொட்டல் மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட பெரிய ராட்டினம், ஜெயிண்ட்வீல், மரணக்கிணறு உள்ளிட்டவைகளுக்கு இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக பொட்டல் மைதானம் விளங்குகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.