மன்னர்குடியில் த.வெ.க பூத் நிர்வாகிகள் கூட்டம்

திருவாரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.;

Update: 2025-07-25 05:24 GMT
திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் UVM ராஜா அவர்களின் தலைமையில் " வெற்றி தலைவரின் வெற்றிக்கான கூட்டம் " என்ற பெயரில் பூத் நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மன்னார்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் உறுதிமொழியுடன் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் நடைபெற்றது . இந்த நிகழ்வில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி ஆன்லைன் செயலி தொடங்கப்பட்டது . இதில் திருவாரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் யூ.வி.எம்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடிப்பதற்கான முயற்சிகள் தமிழக வெற்றி கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கிராமப்புறங்களில் உள்ள தவெக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை முகாமை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார் . கூட்டத்தில் தவெக மகளிரணி பொருப்பாளர்கள் , இளைஞரணி பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .

Similar News