“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆதார் பதிவு மையம் மற்றும் இ-சேவை மையம் செயல்பாடுகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பதிவு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆத்துார் வட்டாட்சியர் முத்துமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.