திண்டுக்கல் மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஒன்பதாவது மற்றும் பத்தாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்;

Update: 2025-07-25 10:42 GMT
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலும் மேற்கு தாசில்தார் முன்னிலையிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது மற்றும் 10-வது வார்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9-வது வார்டு பகுதியான துரைராஜ் நகர், அருணா நகர், சுப்பிரமணியபுரம், மேற்கு கோவிந்தாபுரம், லட்சுமணபுரம், பிச்சால் நாயுடு சந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 900 பேர் மற்றும் 10-வது வார்டு பகுதியான அய்யன்குளம், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, செல்லாண்டி அம்மன் கோவில் வடக்கு தெரு பகுதியில் இருந்து சுமார் 400 பேர் கலந்து கொண்டனர் இம்முகாமில் கலைஞர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டை பெறுதல், இலவச வீட்டு மனை பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கினர் முகாமினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் துணை மேயர் ராஜப்பா தொடங்கி வைத்தனர் மற்றும் பகுதி செயலாளர்கள் சந்தோஷ், ஜானகிராமன் 10 வது வார்டு கவுன்சிலர் 9-வது வார்டு கவுன்சிலர் சாந்தி மற்றும் வார்டு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News