தேன் பூச்சி கடித்து விவசாயி பலி
குமாரபாளையம் அருகே தென்னை மரத்தில் ஏறிய விவசாயி தேன் பூச்சி கடித்து உயிர் இழப்பு குமாரபாளையம் போலீசார் விசாரணை;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் விவசாயியான இவர் தனது நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் வீட்டின் உபயோகத்திற்காக தேங்காய் பறிப்பதற்காக சுமார் 40 அடி உயரத்திற்கு மேல் உள்ள தென்னை மரத்தில் ஏறி உள்ளார் தென்னை மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பது அறியாமல் தேங்காயை பறிக்க முயன்ற பொழுது அங்கிருந்த தேனீக்கள் சக்திவேலை கடித்தன அங்கிருந்து குதித்து தேனீக்கள் கடியில் இருந்து தப்பித்தால் எப்படியும் உயிர் போய்விடும் எனவே தேனீக்கள் கடியை வாங்கிக் கொண்டு மரத்திலிருந்து இறங்கி விட்டார் இதனை அடுத்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சீட்டுக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தார் நூற்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டியதால் அவை விஷமாக மாறியதில் தீவிர சிகிச்சையில் இருந்த சக்திவேல் எதிர்பாராமல் உயிர் இழந்தார் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்