கரைப்பாளையம் பிரிவில்- சாலையைக் கடக்க டூவீலரோடு நின்றிருந்தவர் மீது கார் மோதி விபத்து.

கரைப்பாளையம் பிரிவில்- சாலையைக் கடக்க டூவீலரோடு நின்றிருந்தவர் மீது கார் மோதி விபத்து.;

Update: 2025-07-25 10:43 GMT
கரைப்பாளையம் பிரிவில்- சாலையைக் கடக்க டூவீலரோடு நின்றிருந்தவர் மீது கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா கரைப்பாளையம் செல்வி நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜு வயது 60 இவர் ஜூலை 24ஆம் தேதி காலை 8:15 மணியளவில் கரூர் கோவை சாலையில் கரைப்பாளையம் பிரிவில் தனது டூவீலர் உடன் சாலையை கடக்க நின்று கொண்டு இருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணி ராஜா வயது 29 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ராஜுவின் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை வீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சம்பவம் தொடர்பாக ராஜு அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிய மணி ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News