பயணிகளுக்கு உதவி செய்த பேருந்து நடத்துநர்.
மதுரை சோழவந்தானில் பேருந்தின் பின்புறம் படிக்கட்டு சேதம் அடைந்ததால் பயணிகள் இறங்குவதற்கு நடத்துனர் உதவி செய்தார்;
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வரும் நிலையில் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற பேருந்தில் கீழ் படிக்கட்டு இல்லாததால் பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் தடுமாறி கீழே விழக்கூடிய நிலை ஏற்பட்டது.. குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் கீழ்படிக்கட்டு இல்லாததால் கீழே இறங்குவதில் கடும் சிரமப்பட்டனர்.. இதனை அறிந்த நடத்துனர் படிக்கட்டின் கீழே நின்று அனைவரும் இறங்குவதற்கு உதவி செய்தார்.நடத்துனரின் இந்த மனிதாபிமான செயலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.