உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்
மதுரை திருமங்கலம் தொகுதி நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைகளை வழங்கினார்;
மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் கள்ளிக்குடி வெள்ளாகுளம், ஆவல் சூரன்பட்டி, மயிட்டான்பட்டி நல்லமநாயக்கன்பட்டி ஆகிய கிராம ஊராட்சி பொதுமக்களுக்காக இன்று (ஜூலை.25) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். மேலும் முகாமில் மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.