செல்போன் திருடிய இருவர் கைது.
மதுரை திருநகரில் வீட்டில் செல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை அருகே திருநகர் சீனிவாசாநகர் முதல் தெருவை சேர்ந்த சுதாமன்( 55) என்பவர் சமையல் மாஸ்டராக உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் இவரது வீட்டில் திருட முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அப்போது வீட்டில் இருந்த அலைபேசியை எடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் திருநகர் போலீசார் விசாரணையில், அலைபேசியை திருடியது திருநெல்வேலி வி.கே.புரம் மகேஷ்( 47) மதுரை சின்ன அனுப்பானடி ராஜீவ்காந்திநகர் ஜெயமாரி (24) என்று தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.