மணவாசி-சுங்கச்சாவடி சார்பில் தலைக்கவசம் இலவசமாக வழங்கல்.
மணவாசி-சுங்கச்சாவடி சார்பில் தலைக்கவசம் இலவசமாக வழங்கல்.;
மணவாசி-சுங்கச்சாவடி சார்பில் தலைக்கவசம் இலவசமாக வழங்கல். கரூர் மாவட்டம் , கிருஷ்ணாபுரம் தாலுக்கா, மணவாசி சுங்கச்சாவடியில் , சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மணவாசி சுங்கச்சாவடி ஊழியர்கள் சார்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாயனூர் காவல் ஆய்வாளர் கோபி கலந்துகொண்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தை இலவசமாக வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபரீதம் குறித்து விளக்கி கூறினார். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் செல்போன் பேசிக்கொண்டு செல்வது குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் சுங்கச்சாவடி திட்ட மேலாளர் செந்தில்குமார் சுங்கச்சாவடி வருவாய் மேலாளர் பிரதீப் சிங் கான் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.