சுக்காலியூர்- டூவீலர் மீது லாரி மோதி விபத்து. முதியவர் உயிரிழப்பு.

சுக்காலியூர்- டூவீலர் மீது லாரி மோதி விபத்து. முதியவர் உயிரிழப்பு.;

Update: 2025-07-25 14:01 GMT
சுக்காலியூர்- டூவீலர் மீது லாரி மோதி விபத்து. முதியவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் சுக்காலியூர் அருகே தோரணக்கல்பட்டி , காமராஜ் நகரை சேர்ந்தவர் அல்லி முத்து வயது 79 , இவர் ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணியளவில் கரூர் - மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் சுக்காலியூர் பாலம் அருகே சென்றபோது அதே சாலையில் கரூர் பாகனத்தம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி வயது 55 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி அல்லிமுத்து ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த அல்லி முத்துவின் மகன் சத்தியசீலன் வயது 50 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த அல்லி முத்துவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Similar News