குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பாலம் அருகே வசித்து வருவார் நசீர் (51) எலக்ட்ரீசியன். இவர் தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் தனது தாய்,மனைவி, 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் மேல் கூரை உடைந்து வீட்டின் உள்ளே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து நித்திரவிளை போலீசார், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.