கருவக்குளம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டம்
வடிகாலில் கட்டப்பட்ட பாலத்தை அகலப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல்;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவக்குளம் கிராமத்தில் செல்லும் வடிகால் வாய்க்காலின் குறுக்கே சிறிய அளவில் பாலம் கட்டப்பட்டது இந்த பாலத்தின் அளவு குறுகலாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படும் என கருதிய கிராம மக்கள் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர் இதுகுறித்து அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது