கரூரில் கார்கில் தின வெற்றி விழா பேரணி நடைபெற்றது.

கரூரில் கார்கில் தின வெற்றி விழா பேரணி நடைபெற்றது.;

Update: 2025-07-26 07:51 GMT
கரூரில் கார்கில் தின வெற்றி விழா பேரணி நடைபெற்றது. 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை சுமார் 60 நாட்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் இந்திய தரப்பில் 527 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அதேசமயம் பாகிஸ்தான் தரப்பிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் போரிலிருந்து பின் வாங்கியது. உயிர் தியாகம் செய்து பெற்ற கார்கில் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பன்னாட்டு லயன் சங்கங்கள் சார்பில் முப்படை வீரர்களை பாராட்டும் விழா, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை பாராட்டும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தொடர்ந்து வண்ண குடை பிடித்து தாலுக்கா அலுவலகம் முன்பு இருந்து ஜவகர் பஜார் , பேருந்து நிலைய ரவுண்டானா , திண்ணப்பா கார்னர் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் தூரம் வெற்றி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு லயன் சங்க நிர்வாகிகள்,முன்னாள் ராணுவ வீரர்கள் , விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News