கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள காலி இடத்தில் (சாமிதோப்பு உப்பளம் பகுதி) சிப்காட் (தொழில் பேட்டை)அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று காலை மாவட்ட கலெக்டர் அழகுமீனா,தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது உடன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.