ஆடி வெள்ளி ஊஞ்சல் உற்சவம்

உற்சவம்;

Update: 2025-07-27 04:18 GMT
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆடி 2ம் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தாயார் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரப்பட்டு ஆண்டாள் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News