"உங்களுடன் ஸ்டாலின்" முகாமை தொடங்கி வைத்த எம் எல் ஏ
மதுரை சோழவந்தான் அருகே நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.;
மதுரை சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் எர்ரம்பட்டி, தெத்தூர், மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் பயன்பெறும் வகையில் எர்ரம்பட்டி மந்தை அருகே நேற்று (ஜூலை .26) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார். முகாமில் அனைத்து துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு எம்எல்ஏ வெங்கடேசன் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்