அன்னவாசல் அடுத்த கடம்பராயன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணையா. இவர் பைக்கில் கடம்பராயன்பட்டி-பணம்பட்டி சாலையில் சென்றபோது எதிரே உடையாம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.