சாலையில் ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி.
மதுரை அவனியாபுரம் செம்பூரணி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.;
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி 100-வது வார்டு செம்பூரணி சாலையில் கால்வாய் நிரம்பி அந்த சாலை முழுவதும் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஒடுகிறது. மேலும் கழிவுநீர் சுடுகாடு, துணை சுகாதார நிலையத்தை சுற்றி குளம்போல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் குழந்தைகள் செம்பூரணி சாலையில் நடந்து செல்ல முடியாமல் உள்ளனர். மேலும் கழிவுநீர் துர்நாற்றத்துடன் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.