மயான காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்

மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.;

Update: 2025-07-27 06:57 GMT
மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் மாயான காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை , வெள்ளிக்கிழமை நாளில் மாயான காளியம்மனுக்கு தீப ஆராதனையுடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர் . இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். மற்றும் தொழில் நஷ்டம் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க வேண்டி மாயன காளியம்மனை வேண்டிக்கொண்டனர் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பூசாரி கண்ணையா அன்னதானம் கேப்பை கூல் மற்றும் பழங்கள் பிரசாதமாக வழங்கினார்.

Similar News