நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி பகுதியில் இன்று அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டூர் ,சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் இன்று (ஜூலை .27) முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டும், திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தும் அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார்கள் இந்நிகழ்வில் கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.