கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர்.
மதுரை அருகே கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தினை அமைச்சர் தொடங்கி வைத்தார்;
மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் - தேனூர் ஊராட்சியின் கட்டப்புளி கிராமத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினோம். மேலும் அதற்கான கட்டுமான பணிகளையும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் உயர் அதிகாரிகள் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.