கணவர் ஓட்டிய லாரி மோதியதில் மனைவி பலி.
மதுரை அலங்காநல்லூர் அருகே கணவன் ஓட்டிய லாரி மோதியதில் மனைவி பலியானார்.;
மதுரை அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்த மார்நாடு (45) என்பவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி. (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். நேற்று (ஜூலை .27) மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர் சாக்கடை பணிக்காக எம் சாண்ட் மண்ணை லாரியில் கொண்டு வந்தார். பின் அதை கொட்டிய போது லாரி டயரில் மண் இருந்ததால் அதை ரெங்காதேவி எடுத்துக் கொண்டிருந்த போது பின்னோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் ரெங்காதேவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனே அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியிலேயே ரெங்கா தேவி உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.