பொள்ளாச்சியில் அரசு பஸ்சுக்கு விபத்து: பெரும் விபத்து தவிர்ப்பு

கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகிலிருந்த பெரிய குழிக்குள் விழப்போன நிலையில், டிரைவர் திடீர் முடிவில் பஸ்சை வலப்புறம் திருப்பி சுவற்றில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு.;

Update: 2025-07-28 07:38 GMT
பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆழியார் நோக்கி 41 பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சின் ஸ்டீரிங் பழுதடைந்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகிலிருந்த பெரிய குழிக்குள் விழப்போன நிலையில், டிரைவர் திடீர் முடிவில் பஸ்சை வலப்புறம் திருப்பினார். இதனால் அருகிலிருந்த குடோனின் சுவர் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்றும் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. இதேபோன்று, சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி–கோவை பாதையில் ஒரு பஸ்சில் எஞ்சினில் புகை வந்ததால் பயணிகள் கண்ணாடியை உடைத்து தப்பிய சம்பவமும் நடந்தது. பராமரிப்பு குறைபாடுகள் தொடர்ந்தும் இருப்பதால், பஸ்களை இயக்கும் முன் முழுமையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News